பெங்களூரில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டிய பஸ் டிரைவர்
பெங்களூர்: பெங்களூரில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து பணம் கேட்டு மிரட்டிய பள்ளி பேருந்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூர் கெங்கேரியில் உள்ள ஓம்காரா ஹில்ஸுக்கு 19 வயது கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் கடந்த மாதம் 25ம் தேதி சென்றுள்ளார். அவர்கள் அங்கு யாரும் இல்லாத வீடு ஒன்றில் பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த பள்ளி பேருந்து டிரைவரான சஞ்சீவ் மூர்த்தி(28) மாணவியின் நண்பர் வைத்திருந்த செல்போனை பறித்துள்ளார்.
செல்போனை கேட்டு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டபோது மூர்த்தி மாணவியின் நண்பரை தாக்கியுள்ளார். மேலும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு செல்போனுடன் சென்றுவிட்டார். அதன் பிறகு மூர்த்தி அடிக்கடி போன் செய்து பணம் கேட்டு மாணவியை மிரட்டியுள்ளார். பணம் தரவில்லை என்றால் நடந்ததை வெளியில் கூறிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
மூர்த்தியின் மிரட்டல் அதிகமானதால் மாணவி தனது குடும்பத்தாரிடம் நடந்ததை தெரிவித்தார். குடும்பத்தாரில் ஒருவர் கன்னட அமைப்பில் உள்ளவர். அவர் மாணவியை கெங்கேரி காவல் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்று புகார் கொடுக்க வைத்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் மூர்த்தி பறித்துச் சென்ற செல்போன் சிக்னலை வைத்து அவரை கண்டுபிடித்து கைது செய்தனர்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications