மோடி பதவியேற்பு விழா நடக்கும் போதே.. காஷ்மீரில் பக்தர்களுடன் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த பயங்கரவாத சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத சம்பவங்கள் என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கடந்த காலங்களில் பல முறை அங்கு மோசமான பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

அதேநேரம் சில மாதங்களாகக் காஷ்மீரில் பெரியளவில் தீவிரவாத சம்பவங்கள் நடக்காமல் இருந்தது. இதற்கிடையே இப்போது காஷ்மீரில் மீண்டும் ஒரு அசம்பாவிதம் அரங்கேறி இருக்கிறது.
தாக்குதல்: இதற்கிடையே இப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி என்ற பகுதியில் பயங்கரவாத சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. அங்குப் பேருந்து ஒன்று பக்தர்களை ஏற்றிச் சென்று கொண்டு இருந்துள்ளது. அதை நோக்கி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகே இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
மீட்புப் பணிகள்: இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த தகவல் கிடைத்த உடன் உதவிக்காக ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன. இந்த விபத்து தொடர்பான முதற்கட்ட வீடியோக்கள் இப்போது வெளியாகி உள்ளது. அதில் உள்ளூர் மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவுவது பதிவாகி இருக்கிறது.
எந்த பயங்கரவாத அமைப்பு: இது பயங்கரவாத தாக்குதல் என்பதால் போலீஸ், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த தாக்குதலில் ஈடுபட்டது எந்த பயங்கரவாத அமைப்பு.. எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினர் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த தகவல்களும் தெரிய வரும் என்றும் தெரிகிறது.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications