'பப்பில்' பெண்ணிடம் அத்துமீறிய தொழிலதிபர்: தட்டிக்கேட்ட மேனேஜருக்கு துப்பாக்கி சூடு
மும்பை: பெண்ணிடம் அத்துமீற முயன்ற தொழிலதிபரை தட்டிக்கேட்ட பப் மேனேஜரை சுட்டுவிட்டு அத்தொழிலதிபர் தப்பியோடிய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் செயல்பட்டுவரும் பப் ஒன்றிற்கு தொழிலதிபர் விக்ரம் குமார் கரோடி என்பவர் இரவு சரக்கடித்துவிட்டு ஆடிப்பாட சென்றுள்ளார். அப்போது அங்கு வேலைபார்க்கும் இளம் பெண்ணிடம் விக்ரம் குமார் குசும்பு செய்ததாக கூறப்படுகிறது. இதை அப்பெண் எதிர்த்தார். இருப்பினும்விடாமல் அந்த பெண்ணையே விக்ரம் குமார் நோண்டிக்கொண்டிருந்தார்.
இதையடுத்து விக்ரம் குமாரை, அப்பெண் திட்டியுள்ளார். இதை அலட்சியப்படுத்திய விக்ரம்குமார், பப்புக்கு வேலைக்கு வந்துவிட்டு சகஜமாக இருக்காவிட்டால் எப்படி என்ற ரீதியில் பேசியுள்ளார். இதைப்பார்த்த பப் மேனேஜர் ஜிதேந்திரா ஷா, இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் நிலைமை மோசமானதால், விக்ரம்குமாரை வெளியே போகுமாறு ஜிதேந்தர் ஷா எச்சரித்துள்ளார்.
ஆத்திரமடைந்த விக்ரம்குமார், தான் கொண்டு வந்திருந்த கைத்துப்பாக்கியால் மேனேஜரை நோக்கி சுட்டார். இதில் மேனேஜர் காலில் குண்டு பாய்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியைடந்த பப் ஊழியர்கள் விக்ரம்குமாரை மடக்கிப்பிடித்தனர். மேலும், ஜிரேந்திரா ஷாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணிடம் தவறாக நடந்தது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தொழிலதிபரை கைது செய்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications