Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘அலாரம்’.. இப்படியே போச்சுனா? ‘இந்தியா’ கூட்டணிக்கு எச்சரிக்கை மணி அடித்த இடைத்தேர்தல் முடிவுகள்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: 7 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கும், 'இந்தியா' கூட்டணிக்கும் ஒரு தெளிவான வார்னிங் அலாரம் அடித்துள்ளது.

கேரளா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கேரளாவில் உம்மன் சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் இரண்டு தொகுதிகள் , ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதிகள் என மொத்தம் 7 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

Bypoll results: An clear alarm for India Alliance and Congress

இடைத்தேர்தல் ரிசல்ட்: 7 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. கேரளாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. உத்தர பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் 'இந்தியா' கூட்டணியின் சார்பில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் 'இந்தியா' கூட்டணி சார்பில் ஆளும் ஜே.எம்.எம் வெற்றி பெற்றது. திரிபுரா மாநிலத்தில் நடந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக இரண்டிலும் வெற்றி பெற்றது. இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இடத்தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது.

மேற்கு வங்க மாநிலம் துப்குரி சட்டமன்றத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிபிஐ(எம்) இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜக எம்எல்ஏ பிஷு பதா ரே காலமானதைத் தொடர்ந்து அந்த இடம் காலியானது. 2021ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் ஜவான் ஜெகன்நாத் ராயின் மனைவி தபசி ராய்யை பாஜக வேட்பாளராக நிறுத்தியது.

மேற்கு வங்கம் நிலை: பாஜக வேட்பாளரை, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் 4,309 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். காங்கிரஸ் ஆதரவு பெற்ற சிபிஐ(எம்) வேட்பாளர் ஈஸ்வர் சந்திர ராய் வெறும் 13,758 வாக்குகளைப் பெற்றார். வாக்காளர்கள் காங்கிரஸ்- இடதுசாரி முன்னணி கூட்டணியை இன்னும் வலுவான மாற்றாகக் கருதவில்லை என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சக்ரதிகி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், சிபிஐ(எம்) ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் பெய்ரோன் பிஸ்வாஸ் அமோகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிஸ்வாஸின் வெற்றிக்குப் பிறகு, திரிணாமுல் கட்சியை பாஜகவால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என்ற கட்டுக்கதை உடைந்துவிட்டது என்ற நம்பிக்கை நிலவியது.

காங். அணி சீனில் இல்லை: ஆனால் துப்குரி இடைத்தேர்தல் முடிவுகள் மேற்கு வங்க அரசியலில் தொடரும் இருமுனை ஓட்டத்தை மீண்டும் நிரூபித்துள்ளன. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே போட்டி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் - இடதுசாரி அணி சீனிலேயே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது 'இந்தியா' கூட்டணிக்கு ஒரு எச்சரிக்கை மணி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மேற்கு வங்கத்தில் டிஎம்சி- இடதுசாரி கட்சியின் பாரம்பரிய போட்டி தீர்க்கப்படாவிட்டால், எதிர்க்கட்சி வரிசையில் வாக்குகள் பிரிவது 'இந்தியா' கூட்டணியின் வாய்ப்புகளை பெரியளவில் பாதிக்கலாம் என விமர்சிக்கப்படுகிறது.

இந்தியா கூட்டணிக்கு எச்சரிக்கை: துப்குரி தொகுதி, 1977 முதல் 2011 வரை மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்தது. 2011ல் கூட, 34 ஆண்டுகால இடதுசாரி முன்னணி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த திரிணாமுலின் மாபெரும் அலையின் போதும், இங்கு சிபிஐஎம் வேட்பாளர் மம்தா ராய் வெற்றி பெற்றிருந்தார். 2016க்குப் பிறகு இங்கு சிபிஐஎம் வர முடியாத சூழல் ஏற்பட்டது. இன்று அந்த நிலைமை மோசமடைந்துள்ளது.

2024 லோக்சபா தேர்தலுக்கு 'இந்தியா' கூட்டணி தயாராகி வரும் நிலையில், இந்த 7 தொகுதி இடைத்தேர்தல் அதற்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. இதில் இரண்டில் இந்தியா கூட்டணியும், ஒன்றில் காங்கிரஸ் தனித்தும், இன்னொன்றில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தும், மூன்றில் பாஜகவும் வென்றுள்ளன.

அதிலும் குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் வென்ற துப்குரி தொகுதியில் சி.பிஐ.எம் - காங்கிரஸ் கூட்டணி வெகுசொற்ப வாக்குகளையே பெற்றுள்ளது. பாஜக சுமார் 4 ஆயிரம் வாக்குகள் மட்டுமே திரிணாமுல் கட்சியை விட குறைவாகப் பெற்றுள்ளது. 'இந்தியா' கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகள் தனித்து களமிறங்கினால், அது பாஜகவுக்கே சாதகமாகும் என்ற நிலையை இந்த தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளது.

பாஜகவுக்கு சாதகமாகும்: உத்தர பிரதேசத்தில் இணைந்து நின்ற காங்கிரஸ் - சமாஜ்வாடி கட்சிகள், உத்தரகாண்டில் தனித்துக் களமிறங்கின. உபியில் 'இந்தியா' கூட்டணியின் சமாஜ்வாடி வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆனால், உத்தரகாண்டில், 'இந்தியா' கூட்டணி இணையாத நிலையில் இங்கு பாஜக வேட்பாளர் 2,405 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகள், 'இந்தியா' கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. பாஜகவுக்கு எதிரான அலை இந்த மாநிலங்களில் பெரும்பாலும் இல்லை. இப்படியான சூழலில், எதிர்க்கட்சிகள் தனித்துக் களம் காண்பது வாக்குகள் சிதறி, பாஜகவுக்கு சாதகமாகிவிடும் எனத் தெளிவுபடுத்துகின்றன. 'இந்தியா' கூட்டணி விழித்துக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+