தாய் குளிப்பதை வீடியோ எடுத்த நண்பன்.. மது வாங்கி கொடுத்து கழுத்தறுத்து கொன்ற வாலிபர்!
Recommended Video

ஹைதராபாத்: தாய் குளிப்பதை எட்டிப் பார்த்து வீடியோ எடுத்த தனது நண்பனை கத்தியால் கழுத்தையறுத்து கொன்ற, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத், சந்தாநகர் பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார் (21), கார் டிரைவர். இவரும், சம்பத் குமார் (23) என்பவரும் சிறு வயது முதல் நண்பர்களாம். இதனால் சம்பத் குமார் வீட்டுக்கு அஜய் குமார் அடிக்கடி வருவது வழக்கம்.

ஒருநாள் இப்படி வந்திருந்தபோது, பாத்ரூமில் சம்பத் குமார் தாய் குளித்துக்கொண்டிருந்தார். இதை கதவு வழியாக எட்டிப் பார்த்த அஜய் குமார், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த விஷயம் எப்படியோ சம்பத் குமாருக்கு தெரியவந்தது. எனவே தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று, ஒரு பாரில் இருவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் சம்பத் தனது ஸ்கூட்டரில் அஜயை ஏற்றிக்கொண்டு சந்தாநகர் பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கே வைத்து, தனது தாய் குளிப்பதை எட்டிப் பார்த்த விவகாரம் குறித்து அஜயிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சம்பத், தனது நண்பன் அஜய் கழுத்தை அறுத்துள்ளார். சுமார் 10 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதை அப்பகுதியினர் பார்த்து ஓடி வந்தனர். அதற்குள் சம்பத் குமார் தப்பியோடிவிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அஜய்குமார் இறந்துவிட்டார். அஜய் குமார் தந்தை டேனியல் அளித்த புகாரின் பேரில் சம்பத் குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்களும் இருக்கலாம் என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications