மே.வ. மனித உரிமை ஆணையர் பதவியில் இருந்து ஏ.கே.கங்குலியை நீக்குகிறது மத்திய அரசு!

நீதிபதி ஏ.கே.கங்குலி மீது பயிற்சி பெண் வழக்கறிஞர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்தார். இந்த பிரச்சினை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.
இதைத் தொடர்ந்து ஏ.கே.கங்குலி வகித்து வரும் மேற்கு வங்காள மனித உரிமை ஆணையர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் குரல் எழுந்தது. கங்குலி தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்துக்கு கடிதம் எழுதினார்.
அதே நேரத்தில் கங்குலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அட்டார்னி ஜெனரல், முதல்கட்ட விசாரணையில் நீதிபதி கங்குலி மீது குற்றம் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார். அவர் தனது கருத்தை மத்திய உள்துறைக்கு அனுப்பினார்.
உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. இதற்கிடையே ஏ.கே. கங்குலிக்கு ஏதிராக டெல்லி போலீஸ் சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
இந்நிலையில் மேற்கு வங்காள மனித உரிமை ஆணையர் பதவியில் இருந்து ஏ.கே.கங்குலியை நீக்க கோரி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்விவகாரத்திற்கு மத்திய அமைச்சரவை வருகிற வியாழக்கிழமை ஒப்புதல் அளிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications