பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் அழகியிடம் ஏமாந்த தமிழக தொழிலதிபர்!
பெங்களூர்: பெங்களூரின் ஏழு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், தமிழக தொழிலதிபரின் பொருட்களை விபசார அழகி அபேஸ் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர், எச்.ஏ.எல் பழைய ஏர்போர்ட் பகுதியில் அமைந்துள்ளது லீலா பேலஸ் என்ற ஏழு நட்சத்திர ஹோட்டல். கடந்த மாதம் 23ம் தேதி இந்த ஹோட்டலில் அறை எண் 541 மற்றும் 543 ஆகிய இரு ரூம்கள் ரூ.40 ஆயிரத்திற்கு பெங்களூரை சேர்ந்த ரித்விக் ஷெட்டி என்பவரால் புக் செய்யப்பட்டன.

அழகி ஏற்பாடு
தனது தொழில் பார்ட்னரான தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் வசந்த்ராஜன் (41) மற்றும் ஆர்வி ராஜா (49) ஆகியோருடன் உல்லாசமாக இருக்க, விலை உயர்ந்த விபசார அழகியை புக் செய்திருந்தார் ரித்விக் ஷெட்டி.

பாரில் மது
நண்பர்கள் எல்லோரும், ஹோட்டலிலுள்ள பாரில் அமர்ந்து இரவு 7 மணியளவில் மதுபானம் அருந்தியுள்ளனர். அப்போது, விபசார அழகி தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை என போன் அழைப்பு வந்துள்ளதாகவும், தான் உடனே கிளம்ப வேண்டும் என்றும் கஸ்டமர்களிடம் கூறியுள்ளார்.

அபேஸ்
இதை நம்பிய இந்த தொழிலதிபர்களும், அவரை கிளம்ப சொல்லியுள்ளனர். அவர் ஹோட்டலை விட்டு வெளியேறிய சில நிமிடங்களுக்கு பிறகு பாரில் இருந்து இந்த தொழிலதிபர்கள் தங்கள் ரூம்களுக்கு சென்றுள்ளனர். அப்போதுதான், ரூமில் இருந்த தங்களின் விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

ரூ.6 லட்சம்
தங்க செயின், லாக்கெட், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் திருடுபோயிருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம்.

ஊருக்கு ஒரு பெயர்
அந்த விபசார அழகி ஊருக்கு ஒரு பெயருடன் சுற்றி திரிபவர். பெங்களூரில் அவர் தனது பெயரை சம்ரீன் என்று கூறியிருந்தார். அவரை வலைவீசி பிடிக்க முடியாத நிலையில், போலீசில் புகார் அளிக்க ரித்விக் ஷெட்டி முடிவு செய்தார்.

சங்க தலைவர்
இதையடுத்து ஜீவன்பீமா நகர் காவல் நிலையத்தில் ஷெட்டி புகார் அளித்தார். புகாரில், தன்னை இந்திய தேசிய வணிக யூனியன் காங்கிரஸ் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். வசந்த்ராஜன் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் என்று கூறியுள்ளார். தொழில் உறவை மேம்படுத்த அழகியுடன் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்ததாகவும், ஆனால் இப்படியாகிவிட்டதாகவும் ஷெட்டி கூறியுள்ளார்.

இதே வாடிக்கை
விபசார அழகி மற்றும் திருட்டு விவகாரம் மீடியாவுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று ஷெட்டி எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த வழக்கு அம்பலத்திற்கு வந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த அந்த 32 வயதான அழகி, இதற்கு முன்பும் பல இடங்களில் இதுபோல கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications