திட்டங்களுக்கு தாமத அனுமதி: ஃபிக்கி கூட்டத்தில் ஜெயந்தி நடராஜன் மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
டெல்லி: பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் சுற்றுச் சூழல் அமைச்சகம் தாமதிக்காமல் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகிக்து வந்த ஜெயந்தி நடராஜன், தமது பதவியை திடீரென்று ராஜிநாமா செய்திருந்தார். அவர் ராஜினாமா செய்ததனின் பின்னணியில், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் முடக்கி வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக ஜெயந்தி நடராஜன் வசம் இருந்த சுற்றுச் சூழல் அமைச்சகத்தை பிடி பிடித்துப் பேசினார்.

நேற்றைய கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
அரசின் பல்வேறு நிலைகளில் செயல்படும் தன்னிச்சையான அதிகார மையங்களால் தொழில் திட்டங்கள் பாதிக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்குத் தடை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) ஆண்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்று சனிக்கிழமை ஆற்றிய உரை:
திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மந்தமான முறையில் எடுக்கப்படும் முடிவுகளும், பல்வேறு கட்டங்களில் செயல்படும் தன்னிச்சையான அதிகார மையங்களுமே காரணம். இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.
உதாரணத்துக்கு, ஒரு திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சகமோ அல்லது சம்பந்தப்பட்ட மாநில முதல்வரோ எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம்.
இதுபோன்ற தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் களையப்பட வேண்டும். நாட்டில் அணுகுமுறைகள் மாறி வருகின்றன. ஆகையால், அனைத்து விவகாரங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் முடிவு எடுக்கும் வகையில் விதிமுறைகளை வகுத்துச் செயல்பட வேண்டும்.
பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்கின்றனர் தொழில்துறையினர். சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க வேண்டியது அவசியம் அதே நேரத்தில் உரிய முடிவுகளை குறிப்பிட்ட காலத்துக்குள் எடுக்க வேண்டும் என்றார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications