ரூபாய் நோட்டை மாற்றலாம்.. தோனியை மாற்ற முடியாது.. தனது ஸ்டைலில் பாராட்டிய சேவாக்
அகமதாபாத்: இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில்-லை தோனி தனது மின்னல் வேக ஸ்டம்பிங்கால் பெவிலியன் திரும்ப வைத்தார்.தோனியின் ஸ்டெம்பிங் திறமையை பாராட்டி சேவாக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டனஸ் அணியும் மோதி வருகின்றன. முன்னதாக இந்த போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை துவக்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபீல்டிங்கில் டோட்டலாக சொதப்பியது. இதனால், சுப்மான் கில்-க்கு இரண்டாவது ஓவரிலேயெ கேட்சை தீபக் சஹார் மிஸ் செய்தார். அதன்பிறகு சிக்சரும் பவுண்டரிகளுமாக கில் பறக்க விட்டு அசத்தினார்.
சகார் மட்டும் இல்லை..ஜடேஜா கூட ரன் அவுட் மிஸ் செய்தார். இதனால் தொடர்ந்து சென்னை அணி ஃபீல்டிங்கில் சொதப்ப இந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திய குஜராத் அடித்து ஆட ஆரம்பித்தது. அதேவேளையில், தோனி தனது வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில் -லின் அதிரடிக்கு தடை போட்டார். இதனால் சென்னை ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனெனில், குஜாராத் அணிக்காக விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்சன் மைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்தினார். அவரது பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் சிக்சரும் பவுண்டரிகளுமாக பறந்தன. 47 பந்துகளில் 96 ரன்கள் அடித்து பிரம்மிக்க வைத்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் 20 ஓவர்களில் 214 ரன்கள் என்ற இமாலய ரன்களை அடித்தது.
இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. 3 பந்துகளே வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சுப்மான் கில்லை தோனி ஆவுட் ஆக்கிய விதம் கிரிக்கெட் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கில்-லை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார்.
இதனிடையே இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாகும் தோனியின் ஸ்டம்பிங் திறமையை பாரட்டியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் தோனி பதிவிட்டுள்ளதாவது:- வங்கியில் இருந்து ரூபாய் நோட்டை மாற்ற முடியும். ஆனால் தோனியை விக்கெட்டிற்கு (ஸ்டம்பிற்கு) பின்னால் இருந்து யாராலும் மாற்ற முடியாது. எப்போதும் போலவே தோனி வேகமாக செயல்பட்டுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications