கனடா தேர்தல்: காலாவதியான காலிஸ்தான் கும்பல்-இந்தியாவுக்கு குடைச்சல் தந்த ஜக்மீத்சிங் சோலி முடிஞ்சது!
டெல்லி: கனடா நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியாவில் சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற தனிநாடு கோரும் தீவிரவாத கும்பல் பெரும் தோல்வி அடைந்துள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதிகளைக் கொண்ட புதிய ஜனநாயகக் கட்சி (NDP) தலைவர் பதவியில் இருந்து இந்தியாவுக்கு எதிரான ஜக்மீத்சிங் பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற தனிநாடு அமைக்க வேண்டும் என்பது 1980களில் எழுந்த கோரிக்கை. இதற்காக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் அழித்தொழித்தார். இதனாலேயே இந்திரா காந்தி அம்மையாரை சீக்கியர்கள் படுகொலை செய்தனர். இந்தப் படுகொலையைத் தொடர்ந்து 1984-ல் சீக்கியர்கள் பெருமளவு கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது இந்தியாவை விட்டு தப்பி ஓடிய காலிஸ்தான் ஆதரவு கும்பல், அமெரிக்காவிலும் கனடாவிலும் அடைக்கலம் புகுந்தது.

கனடாவில் காலூன்றிய காலிஸ்தான் கும்பல், ஜக்மீத்சிங் தலைமையில் புதிய ஜனநாயகக் கட்சியை உருவாக்கியது. கனடாவில் வாழும் சீக்கியர்களிடையே செல்வாக்கையும் பெற்றது. கனடாவின் முன்னாள் பிரதமர் ட்ரூடோவின் சிறுபான்மை அரசுக்கு புதிய ஜனநாயகக் கட்சி முழு ஆதரவு தந்தது. இதனாலேயே ட்ரூடோ, இந்தியாவுக்கு எதிரானவராகவே இருந்தார். ட்ரூடோ பதவிக் காலத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்குமான நல்லுறவு நாசமாகக் காரணமே இந்த ஜக்மீத்சிங்கின் புதிய ஜனநாயகக் கட்சிதான்.
கனடாவில் தற்போது நடைபெற்ற தேர்தலில் இந்த புதிய ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வி அடைந்துள்ளது. அத்துடன் ஜக்மீத் சிங் தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதியில் இந்த முறை 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்துவிட்டார். கனடா வாழ் சீக்கியர்களிடம் ஜக்மீத் சிங் மற்றும் அவரது புதிய ஜனநாயகக் கட்சி செல்வாக்கை பறிகொடுத்துவிட்டது. இந்தியாவுக்கு எதிரான திமிரான ஆணவப் போக்கினால்தான் இந்த படுதோல்வியை ஜக்மீத்சிங் சந்திக்க நேரிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கனடா தேர்தலில் படுதோல்வி அடைந்துவிட்டதால் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ஜக்மீத்சிங் ராஜினாமா செய்துவிட்டார். இனியாவது கனடாவில் இருந்தபடியே இந்தியாவுக்கு குடைச்சல் கொடுப்பதை ஜக்மீத்சிங் நிறுத்திக் கொள்வார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கனடா தேர்தலில் 4-வது முறையாக லிபரல் கட்சி ஆட்சியைத் தக்க வைக்கிறது. பிரதமர் மார்க் கார்னே மீண்டும் பிரதமராகிறார்.












Click it and Unblock the Notifications