புற்றுநோய்.. கணவன், மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை
புவனேஸ்வர்: ஒடிஷாவில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பெண் தனது கணவருடன் சேர்ந்து பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள சாரிகாவ்ன் கிராமத்தைச் சேர்ந்தவர் சனதன் தாஸ்(71). அவரது மனைவி ஹரா தாஸ்(65). அவர்களின் மகன் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வேலை பார்த்து வருகிறார். அவரது வருமானத்தை நம்பி தான் சனதன் தம்பதி இருந்தனர். ஹரா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
வறுமை காரணமாக அவர்களால் புற்றுநோய் சிகிச்சைக்கு செலவு செய்ய முடியவில்லை. இந்நிலையில் அவர்கள் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு பின்புறம் உள்ள வயலில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை அவர்கள் வயலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புற்றுநோய் சிகிச்சைக்கு அதிகம் பணம் செலவாகுவதால் அதை சமாளிக்க முடியாமல் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று அக்கம்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications