''கௌன் பனேகா குரோர்பதியில்'' ரூ.1 கோடி வென்ற புற்று நோயாளி
மும்பை: மார்பக புற்றுநோயில் இருந்து குணமடைந்து கல்லீரல் புற்றுநோயால் அவதிப்படும் மேகா பாட்டில் என்பவர் அமிதாப் பச்சன் நடத்தும் கே.பி.சி. எனப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் ரூ.1 கோடி வென்றுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி எனப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மேகா பாட்டில் என்ற இல்லத்தரசி கலந்து கொண்டார்.
மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மேகா.

ரூ.1 கோடி
அமிதாப் பச்சன் கேட்ட கேள்விகளுக்கு நம்பிக்கையுடன் பதில் அளித்த மேகா ரூ.1 கோடி வென்றார்.

புற்றுநோய்
கடந்த 2008ம் ஆண்டு மேகா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது அவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.

பணம்
நிகழ்ச்சியில் வென்ற பணத்தை வைத்து தனது மருத்துவ செலவுக்காக வாங்கிய கடனை அடைக்கப் போவதாக மேகா தெரிவித்தார். கடனை அடைத்தது போக மீதமுள்ள பணத்தை தற்போது வாங்கும் மருந்துகளுக்கும், குழந்தைகளின் கல்விக்கும் செலவு செய்ய திட்டமிட்டுள்ளார் மேகா.

மகன்
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மேகா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஐ.ஐ.டி.யில் படிக்கும் அவரது மகன் தான் ஊக்குவித்தாராம். பல பொது அறிவு புத்தகங்களை வாங்கி அவர் தனது தாயிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார்.

அமிதாப்
வாழ்க்கையில் நோயுடன் போராடினாலும் துணிச்சலுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேகாவை பார்த்து அமிதாப் பச்சன் நெகிழ்ந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications