மகா ஜனங்களே, ஒரு நற் செய்தி... கேன்டி கிரஷ் சாகாவுக்கு முடிவு கட்டுகிறது பேஸ்புக்!
டெல்லி: கேன்டி கிரஷ் விளையாட வருமாறு வரும் அழைப்பு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் டெல்லி ஐஐடியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில்,

ஃபேஸ்புக்
இந்தியாவுக்கு வந்திருப்பது சிறப்பாக உள்ளது. மக்களை இணைப்பது தான் ஃபேஸ்புக்கின் நோக்கம். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக 30 லட்சம் பேர் ஃபேஸ்புக் மூலம் தான் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்ஆப்
இந்தியாவில் ஏராளமானோர் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள். மேலும் எங்களுடைய வாட்ஸ்ஆப்பையும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் இன்னும் ஏராளமானோர் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் உள்ளனர். இந்திய மக்களை இணைப்பது உலகிற்கு நாங்கள் செய்யும் முக்கியமான விஷயங்களில் ஒன்று. இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உலக நாடுகளுடன் தொடர்பு ஏற்படுத்த முடியாது.

கேன்டி கிரஷ்
கேன்டி கிரஷ் விளையாட வரும் அழைப்புகளை எப்படி தடுப்பது என்று மாணவர் ஒருவர் கேட்டதற்கு ஜக்கர்பர்க் கூறுகையில், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். விரும்புபவர்களுக்கு மட்டும் கேன்டி கிரஷ் அழைப்பு வரும்படி செய்வோம் என்றார்.

ஏழைகள்
ஃபேஸ்புக் எப்படி ஏழைகளுக்கும், படிப்பறிவில்லாதவர்களுக்கும் உதவும் என்று கேள்விக்கு ஜக்கர்பர்க் அளித்த பதில், நான் கல்வி முறை பற்றி கற்றுக் கொண்டிருக்கிறேன். மேலும் சுகாதாரம், அறிவியல் பற்றியும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நோய்களை தடுப்பதை விட குணப்படுத்த அமெரிக்க அரசு அதிக பணம் செலவு செய்கிறது. இது ஒரு பெரிய வாய்ப்பு ஆகும். அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியுமா என தெரியவில்லை. எதிர்காலத்தில் நடக்கலாம்.

நெட் நியூட்ராலிட்டி
இன்டர்நெட்.ஓஆர்ஜி சிறந்த விஷயம் தான் ஆனால் நெட் நியூட்ராலிட்டி பற்றி பல கேள்விகள் எழுகிறதே. இன்டர்நெட்.ஓஆர்ஜி நெட் நியூட்ராலிட்டியை ஆதரிக்குமா என்று மாணவர் ஒருவர் கேட்டதற்கு, கண்டிப்பாக. இது குறித்து அதிகாரிகளுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறோம் என்றார் ஜக்கர்பர்க்.

தாஜ்மஹால்
தாஜ்மஹால் புகைப்படத்தில் பார்த்ததைவிட நேரில் மிக அழகாக உள்ளது. ராணுவ வெற்றியை கொண்டாட பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. ஆனால் தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னம் என்பதால் தனித்துவம் வாய்ந்தது. தாஜ்மஹாலை நேரில் பார்த்ததில் நான் அதிர்ஷ்டசாலி என்றார் ஜக்கர்பர்க்.

ஃபேஸ்புக்
என் கல்லூரியில் உள்ளவர்களை இணைக்க நான் ஃபேஸ்புக்கை உருவாக்கினேன். ஒரு நாள் இந்த உலகமே ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் என்று அப்போது நான் நினைக்கவில்லை என ஜக்கர்பர்க் தெரிவித்தார்.

சொந்த தொழில்
புதிதாக தொழில் துவங்குவோருக்கு எது சரியான தொழில் என்ற கேள்விக்கு ஜக்கர்பர்க் கூறுகையில், தாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை தெரியாமலேயே பலர் புதிய நிறுவனம் துவங்குவதை பார்த்துள்ளேன். எந்த பெரிய நிறுவனத்தை துவங்கியவரும் அது ஒரு நாள் பெரிய நிறுவனமாகும் என்று நினைத்திருக்க மாட்டார். உங்களுக்கு பிடித்தது எது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப நிறுவனம் துவங்கவும் என்றார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications