தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அரசியல் கட்சிகளில் பதவி வகிக்க தடை இல்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அரசியல் கட்சிகளில் பதவி வகிக்க தடை இல்லை என்கிறது மத்திய அரசு.
டெல்லி: தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் அரசியல் கட்சியை உருவாக்கி நடத்தவோ அதில் பதவி வகிக்கவோ தற்போதைய சட்டங்கள் எந்த தடையும் விதிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அரசியல் கட்சி தொடங்க, பதவி வகிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

இவ்வழக்கை தாக்கல் செய்த பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா, லாலு பிரசாத், சசிகலா, சவுதாலா ஆகியோர் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனர்; ஆனால் கட்சிகளில் பதவி வகிக்கின்றனர். இதேபோல சுரேஷ் கல்மாடி, ஆ. ராஜா, ஜெகன் மோகன் ரெட்டி, மது கோடா, அசோக் சவாண், ஓவைசி, கனிமொழி, மாயாவதி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட பலரும் கட்சி பதவி வகிக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்த மத்திய அரசு, தற்போதைய சட்ட விதிகளின் படி குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் கட்சியை தொடங்கவோ, கட்சி பதவிகளை வகிக்கவோ தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
மேலும் கட்சி பொறுப்புகளை நியமிப்பது என்பது கட்சிகளின் தன்னாட்சி அதிகாரத்தைப் பொறுத்தது எனவும் மத்திய அரசு சுட்டிக்காட்டியிருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications