மகளை கொன்று இரவு முழுவதும் காரில் மறைத்து வைத்த இந்திராணி
மும்பை: மகளை கொலை செய்து காரில் மறைத்து ஒரு நாள் இரவு முழுவதும் கேரரேஜில் வைத்திருந்தது ஸ்டார் டி.வி., முன்னாள் சி.இ.ஓ மனைவியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மகளை கொலை செய்த வழக்கில் ஸ்டார் இந்தியா டிவி நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை ஆகஸ்ட்31 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷீனா போரா.

இவர் மும்பையில் வோர்லி பகுதியில் வசித்து வந்தார். இவர் இந்திராணி முகர்ஜியின் மகள் ஆவார். கடந்த 2012 ஆம் ஆண்டில் காணாமல் போனார். பின்னர் நடந்த விசாரணையில், ஷீனா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பந்த்ரா மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இந்திராணியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை வைத்ததால் ஆகஸ்ட் 31வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக பீட்டர் முகர்ஜி இருந்த போதுதான் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆனது.
பீட்டர் - இந்திராணியின் திருமணம் 2002 ஆம் ஆண்டு நடைபெற்றது. மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்த இந்திராணி, பீட்டரின் இரண்டாவது மனைவியாவார். கடந்த 2012ம் ஆண்டு தனது மகள் ஷீனாவை கொலை செய்து அவரது உடலை யாருக்கும் தெரியாமல் வீசிவிட்டார்.
அதற்கு முன்னதாக ஷீனாவை கொலை செய்து காரில் மறைத்து சுற்றி விட்டு, பின்னர் தனது வீட்டில் உள்ள கேரேஜில் மறைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மூன்றாண்டுகளுக்குப் பின்னர் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக்கொலைக்காண காரணம் பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications