டெல்லியை சுத்தப்படுத்திய கேஜ்ரிவால் துடைப்பம் ஆன்லைனில் ரூ. 5க்கு விற்பனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னமான துடைப்பத்தை தற்போது ஆன்லைனில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஒரு துடைப்பம் 5 ரூபாய் என்று விலை வைத்து ஆன்லைனில் பலர் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனராம்.

ஊழலை ஒழித்து நாட்டை சுத்தப்படுத்த வந்த துடைப்பம் என்பதுதான் தேர்தல் பிரசாரத்தின்போது துடைப்பத்துடன் பிரசாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சியினரின் முழக்கமாக இருந்தது. எனவே துடைப்பம் இப்போது பிரபலமாகி விட்டது.

பாசப் பார்வையில் துடைப்பம்

பாசப் பார்வையில் துடைப்பம்

நாடு முழுவதும் வீட்டுக்கு வீடு துடைப்பம் ஏகப்பட்டது இருந்தாலும் இதுவரை இல்லாத ஒரு பாசப் பார்வையை மக்கள் அதன் மீது வீச ஆரம்பித்துள்ளனர். காரணம் ஆம் ஆத்மி.

ஊழலை துடைக்க வந்த துடைப்பம்

ஊழலை துடைக்க வந்த துடைப்பம்

ஊழலை ஒழித்து நாட்டை சுத்தப்படுத்த வந்த சாமான்ய மக்களின் ஆயுதமாக தற்போது துடைப்பம் பார்க்கப்பட ஆரம்பித்துள்ளது.

ஆன்லைனில் துடைப்பம் வாங்கலையோ...

ஆன்லைனில் துடைப்பம் வாங்கலையோ...

இதையடுத்து பலரும் ஆன்லைன் மூலம் இதுதான் ஊழலை ஒழிக்க வந்த துடைப்பம் என்ற டேக் லைனுடன் துடைப்ப விற்பனையில் குதித்து விட்டனர்.

5 ரூபாய்க்கு ஒரு துடைப்பம்

5 ரூபாய்க்கு ஒரு துடைப்பம்

டிரேடஸ். காம் என்ற இ காமர்ஸ் இணையதளம், 5 ரூபாய்க்கு துடைப்பம் விற்று வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பையும் அது வெளியிட்டுள்ளது.

5 ரூபாய்க்கு புத்தம் புது துடைப்பம் வாங்குங்கள்

5 ரூபாய்க்கு புத்தம் புது துடைப்பம் வாங்குங்கள்

அந்த விளம்பரத்தில், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வாருங்கள். புத்தம் புதிய ஆம் ஆத்மி துடைப்பம் வெறும் 5 ரூபாய்க்கே கிடைக்கும். இந்த துடைப்பத்தைக் கொண்டு ஊழலற்ற டெல்லியை உருவாக்குங்கள் என்று போட்டு வைத்துள்ளனர்.

ஆம் ஆத்மி குஷன் கவர், மக்...

ஆம் ஆத்மி குஷன் கவர், மக்...

இதேபோல ஆம் ஆத்மி குஷன் கவர், ஆம் ஆத்மி மக் என்று பல பொருட்களையும் விற்று வருகிறது இந்த இணையதளம்.

முதல் 1000 துடைப்பத்துக்குத்தான் 5 ரூபாய்

முதல் 1000 துடைப்பத்துக்குத்தான் 5 ரூபாய்

முதல் 1000 துடைப்பத்துக்குத்தான் விலை 5 ரூபாயாம். அதன் பின்னர் ஒரு துடைப்பம் ரூ. 19 என்று நிர்ணயித்துள்ளனராம்.

நல்லாத்தாய்யா கெளம்புறாய்ங்க.. நாட்டுல

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+