ஹர ஹர கோஷம்: மோடி, அமித்ஷா மீது வாரணாசி கோர்ட்டில் வழக்கு
வாரணாசி: "ஹர ஹர மோடி" என்று பாஜகவினர் சரண கோஷம் எழுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியினர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் 'ஹர ஹர மோடி" என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஹர ஹர சரண கோஷம் என்பது இறைவனுக்குரியது. அதை மோடி என்ற தனிநபருக்காக பயன்படுத்தக் கூடாது என்று காசி மற்றும் துவாரகை சங்கராச்சாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மோடியும் தமது ஆதரவாளர்கள் அத்தகைய சரண கோஷத்தை பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் இன்று தாக்கல் செய்த வழக்கில், மோடியை சிவபெருமானுக்கு இணையாக சித்தரித்து ஹர ஹர கோஷம் எழுப்புவதன் மூலம் தமது மத உணர்வுகள் புண்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச பாஜக பொறுப்பாளர் அமித் ஷா, வாரணாசி மேயர் ராம் கோபால் மோகலே ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications