ஆபரேஷன் செய்கையில் நோயாளியின் வயிற்றில் 8 இன்ச் வயரை வைத்து தைத்த டாக்டர்கள்
டெல்லி: டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனை மருத்துவர்கள் நோயாளி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்றுகையில் அவரது வயிற்றில் 8 இன்ச் வயரை வைத்துவிட்டனர்.
வடகிழக்கு டெல்லியில் உள்ள பஜன்புராவைச் சேர்ந்தவர் ராதே ஷ்யாம்(52). புகைப்படக் கலைஞர். டெல்லி அரசால் நடத்தப்படும் லோக் நாயக் மருத்துவமனையில் அவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற அறுவை சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவருக்கு வயிற்றில் வலி இருந்து கொண்டே உள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி அவருக்கு வயிற்று வலி அதிகமாகவே லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அதிர்ச்சி குறித்து ஷ்யாம் கூறுகையில்,
கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே எனக்கு வயிற்று வலி இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்ததால் வலி இருக்கும் போன்று என நினைத்தேன். இந்நிலையில் கடந்த மாதம் வலி அதிகரிக்கவே அதே மருத்துவமனைக்கு சென்றேன். எனக்கு அல்ட்ரா சவுண்டு செய்துவிட்டு சில வலி நிவாரணிகளை அளித்து என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
வலி மறுபடியும் வந்ததும் மருத்துவமனைக்கு சென்றேன். இம்முறை எக்ஸ்ரே எடுத்தனர். அதில் என் வயிற்றில் 8 இன்ச் வயர் இருப்பது தெரிய வந்தது. ஆனால் மருத்துவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
வயரை எடுக்க வரும் 28ம் தேதி உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்கிறோம் என்றனர் என்றார்.
நான் செய்யாத அறுவை சிகிச்சை பற்றி நான் பேச முடியாது எனன லோக் நாயக் மருத்துவமனை அதிகாரி டாக்டர் சித்தார்த் ராம்ஜி தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications