For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் என்று அர்த்தமா? தமிழக அரசு கேள்விக்கு உச்சநீதிமன்றம் பதில்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்கீம் என்ற வார்த்தை குறித்த தமிழக அரசின் கேள்விக்கு உச்சநீதிமன்றம் பதில்

    டெல்லி: ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் அல்லது அதைப்போன்ற ஒரு அமைப்புதானே என்ற தமிழக அரசின் சந்தேகத்திற்கு, ஆம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா பதில் அளித்தார்.

    காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 6 வாரங்களுக்குள் காவிரி பங்கீடு தொடர்பாக ஸ்கீம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

    இந்த நிலையில், காலக்கெடு முடிந்த பிறகு, ஸ்கீம் என்றால் என்ன என உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுகி விளக்கம் கேட்டது. அதேபோல, மத்திய அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.

    தலைமை நீதிபதி அமர்வு

    தலைமை நீதிபதி அமர்வு

    இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது ஸ்கீம் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது குறித்து வாதம் எழுந்தது. தமிழகம் சார்பில் வாதிடுகையிலல், ஸ்கீம் என்பது இறுதியாக ஒரு வாரியத்தை அமைப்பதோ அல்லது செயல்படுத்தும் வகையிலான ஒரு குழுவை அமைப்பதோகத்தான் இருக்க முடியும் என வாதிட்டது.

    கண்டிப்பாக

    கண்டிப்பாக

    இதற்கு தலைமை நீதிபதி, "கண்டிப்பாக" (Obviously) என்று பதில் அளித்தார். இதன் மூலம், காவிரி வாரியம் அல்லது, தீர்ப்பை செயல்படுத்தும் வகையிலான வலிமையான ஒரு அமைப்பைதான் ஸ்கீம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது உறுதி செய்யபபடுகிறது. இருப்பினும் இது வார்த்தையில் கூறப்பட்டது தவிர, எழுத்துப்பூர்வ உத்தரவு அல்லது பதில் இல்லை.

    கருத்து கேட்பு

    கருத்து கேட்பு

    அதேநேரம், மத்திய அரசு மே 3ம் தேதி, எந்த மாதிரி ஸ்கீம் வரையறை செய்கிறது என்பதை பார்த்து, அதுகுறித்து, தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களிடமும் கருத்து கேட்டு உச்சநீதிமன்றம் அதை இறுதி செய்யும் என்றும், சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. எனவே, மத்திய அரசு ஸ்கீம் பற்றி வரையறுத்த பிறகு 4 மாநிலங்களின் கருத்துக்களையும் கேட்டே உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் என்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் ஆகும் என தெரிகிறது.

    தீர்ப்பு உள்ளடங்கியது

    தீர்ப்பு உள்ளடங்கியது

    இதனிடையே காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு பற்றி அட்வகேட் ஜெனரல் வேணுகோபால், உச்சநீதிமன்றத்தில் சந்தேகம் கிளப்பினார். ஆனால், நீதிமன்றமோ, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குள் அடங்கிவிட்டது. எனவே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை பற்றி இப்போது ஏன் சந்தேகம் கேட்கிறீர்கள் என்று தெரிவித்தார்.

    English summary
    Tamil Nadu says, the 'scheme' must ultimately provide for a Board or an implementing authority, and the CJI replied, Obviously.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X