காவிரி வழக்கு.. கர்நாடகத்திற்கு "ஷாக்" கொடுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் உடனடியாக 50 டிஎம்சி தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காவிரி மேற்பார்வைக் குழுவை இரண்டு மாநிலங்களுமே எதிர்ப்பதால், இவ்விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே தீர்வாக இருக்கும் என வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பதற்றமான சூழ்நிலைக்கிடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. காவிரியில் விநாடிக்கு 3000 கனஅடிநீர் திறந்து விடுவதற்கு காவிரி நதிநீர் மேற்பார்வைக்குழு உத்தவிட்டுள்ளதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற்றது.
காவிரியில் உடனடியாக 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. கடந்த 5ஆம் தேதி, காவிரி தொடர்பான வழக்கில், நாளொன்றுக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீரை 10 நாட்களுக்கு திறந்துவிடுமாறு, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

கர்நாடகா மறு சீராய்வு மனு
இதையடுத்து, கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து, தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது கர்நாடக அரசு. கர்நாடக அரசின் மறு சீராய்வு மனுவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தண்ணீர் திறக்க உத்தரவு
இந்த வழக்கு விசாரணை கடந்த 12ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நாள் ஒன்றுக்கு 12,000 கன அடி வீதம் வரும் 20ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கறார் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கிடையில், கடந்த 12ஆம் தேதி கூடிய, காவிரி மேற்பார்வைக்குழுக் கூட்டம் எந்த முடிவையும் எடுக்காமல், 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடகாவில் வன்முறை
செப்டம்பர் 20ம் தேதி வரை தமிழகத்திற்கு 12 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் போராட்டம், பந்த் என கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் பதற்றம் நீடித்தது. கர்நாடகாவில் தமிழர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். தமிழக வாகனங்கள் கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

தமிழகத்தில் பந்த்
கர்நாடகாவின் செயலை கண்டித்து கடந்த 16ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அதன்பின் கர்நாடகாவில் லேசான இயல்பு நிலை திரும்பியது. எனினும் தமிழகம் கர்நாடகா இடையே பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு இரு மாநில எல்லைகளிலும் பதற்றநிலை நீடித்து வருகிறது.

காவிரி மேற்பார்வைக்குழுக் கூட்டம்
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேற்பார்வைக்குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் செப்டம்பர் 21 முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என காவிரி மேற்பார்வைக்குழு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகாவில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூறிய கர்நாடகா, அம்மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டிருந்த நீரை தற்போது அத்துமீறி நிறுத்தியுள்ளது கர்நாடகா.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
காவிரியில் 50 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது. அதோடு காவிரி மேற்பார்வை குழுவின் உத்தரவை எதிர்த்தும் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. 3000 கனஅடி நீர் போதாது என்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

கர்நாடகா மறுப்பு
விசாரணையின் போது தமிழக கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக தரப்பு, தமிழகத்திற்கு மேலும் நீர் திறந்து விட இயலாது என கூறியது. ஏனெனில் தங்களது மாநில அணைகளில் போதிய நீர் இல்லை என வாதிட்டுள்ளது. குடிநீருக்கே தண்ணீர் இல்லாத போது தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கமுடியாது எனவும் கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

தமிழக தரப்பு வாதம்
தமிழக தரப்பு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். காவிரியில் கூடுதல் தண்ணீர் கிடைக்காவிட்டால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கும் என்றும் கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு தரும் அளவிற்கு போதிய தண்ணீர் இருப்பு உள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். உச்சநீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் நடைபெற்றன.

காவிரி மேலாண்மை வாரியம்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசு ஏன் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என வினவியது. காவிரி மேற்பார்வைக் குழுவை இரண்டு மாநிலங்களுமே எதிர்ப்பதால், இவ்விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே தீர்வாக இருக்கும் என வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும்பட்சத்தில் கர்நாடகாவில் மீண்டும் வன்முறை நிகழும் என்று கருதப்பட்டதை அடுத்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கர்நாடகாவில் 21ம் தேதிவரை மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் பள்ளிகள் அவசரம் அவசரமாக மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.

144 தடை உத்தரவு
பெங்களூருவில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு தொடரும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. பெங்களூரு, மைசூரு போன்ற இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், தமிழர்களுக்கு எதிராக வன்முறை நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், தீவிர கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக, கர்நாடகா மாநில போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் பதற்றம்
பதற்றம் நிறைந்த மாண்டியா மாவட்டத்தில் 5 தாலுகாக்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு அந்த தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த வாரங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே மாண்டியா மாவட்ட விவசாயிகள்தான் அதிக அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னட அமைப்பினர் வன்முறையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications