காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகளை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்- தேவகவுடா அட்வைஸ்
பெங்களூர்: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிலுள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இல்லாவிட்டால், கர்நாடகாவுக்கு இழப்பு ஏற்படும், இந்த விஷயத்தில் தமிழக கட்சிகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹாசனில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி விவகாரத்தில், சிறுபிள்ளைத்தனமாக கர்நாடகா நடந்து கொண்டால் தமிழகம் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு அதிகரித்துவிடும். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை. காவிரி விவகாரத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்துவிட்டு ஒரே அணியில் திரண்டுள்ளனர்.
கர்நாடகாவிடமும் அதே ஒற்றுமை மனப்பாங்கு வர வேண்டும். பருவமழை கர்நாடகாவை கைவிட்டுள்ளது. எனவே காவிரி நதியை நம்பியுள்ள மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு தேவகவுடா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications