காவிரி: மண்ணை தின்று போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர்.. மண்டியாவில் இன்று பந்துக்கு அழைப்பு
பெங்களூரு: தமிழகத்திற்கு இன்று முதல் 27ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் மீண்டும் தொடங்கி உள்ளது. இதனிடையே மண்டியாவில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
காவிரி நிதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், காவிரியில் இன்று முதல் 27ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதித்தது உச்சநீதிமன்றம். மேலும், காவிரி வழக்கு மீண்டும் செப்டம்பர் 27ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் மீண்டும் தொடங்கி உள்ளது. மண்டியாவில் முன்னாள் எம்.பி மாதே கவுடா தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மண்டியாவில் மண்ணை தின்றும், செருப்புகளை தலையில் வைத்து சாலையில் அமர்ந்து கொண்டும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
அதேபோல் மைசூரிலும் கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. குருபூரு சாந்தகுமார் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டம் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதனிடையே மண்டியாவில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications