காவிரி: தமிழகத்திற்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது.. ஓ.பி.எஸ் மகிழ்ச்சி!
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில் இந்த காவிரி மேலாண்மை செயல்திட்டம் குறித்து தற்போது தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு ஆராய்ச்சி செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்ற அரசு இறுதிவரை போராடும். நீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் தெளிவாக கூறியுள்ளது.
காவிரி நீர்ப் பங்கீடு சாதக, பாதகங்கள் பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டபின் உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது, மத்திய அரசு அளித்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாது, இதனால் இதுகுறித்து முழுமையாக ஆராய்ந்த பின் விளக்கம் அளிப்போம், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications