Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரி: கர்நாடகா பந்த்- முதல்வர் ஸ்டாலின் படம் மீது கையை அறுத்து ரத்தம் பீய்ச்சி..."வெறி" முழக்கம்!

Subscribe to Oneindia Tamil

மண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகாவின் ஹாசன், மண்டியா, மைசூர், சாம்ஜ்ராநகரில் முழு அடைப்புப் போராட்டம் முழு அளவில் நடைபெற்றது.

தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறக்கவே கூடாது என்பது கன்னட அமைப்புகள், விவசாயிகளின் முழக்கம். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட்டால் விவசாயம் பாதிக்கும், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்பது அவர்களது கருத்து.

Cauvery: Karnataka Bandh- Normal Life hit in Mandya, Hassan, Chamarajanagar districts

தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன. ஆனாலும் கர்நாடகா அரசு குறைந்த் அளவு நீரைத்தான் திறந்துவிடுகிறது. இதற்கும் கூட எதிர்ப்பு தெரிவித்துதான் மண்டியா பந்த், பெங்களூர் பந்த் தற்போது கர்நாடகா பந்த் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இன்றைய கர்நாடகா பந்த் போராட்டம், மைசூர்- மண்டியா- ஹாசன், சாம்ராஜ் நகரில் முழு அளவில் நடைபெற்றது. இம்மாவட்டங்களில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இன்றைய போராட்டத்தின் போது, கஸ்தூரி ஜனபர வேதிகே என்ற கன்னட அமைப்பினர் தமிழ்நாடு முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் கைகளை அறுத்து முதல்வர் ஸ்டாலின் படத்தின் மீது ரத்தத்தை தெளித்து, ரத்தம் கூட தருவோம் சொட்டு நீரைத் தரமாட்டோம் என முழக்கம் எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மைசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையிலும் மறியல் போராட்டம் நடத்தினர். இத்தனைக்கும் 144 தடை உத்தரவு அமலில் இருந்தும் இந்த போராட்டங்கள் நடந்தன.

மேலும் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர் மாநகரில் தரையில் உருண்டு புரண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மண்டியாவில் காவிரி ஆற்றுக்குள் இறங்கி மூழ்கியபடியே போராட்டம் நடத்தினர். பெங்களூரில் 144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜ் கும்பல், குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்யப்பட்டனர்.

இத்தகைய போராட்டங்களால் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதர வடகர்நாடகா, கடலோர கர்நாடகா பகுதிகளில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+