For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: மும்பையில் ராஜ்தாக்ரே-லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

By Siva
Google Oneindia Tamil News

மும்பையில், மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரேவை திடீரென லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். அரசியல், சினிமா, சமூகப்பணி உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்திதாக முதல் கட்ட தகவல்கள் தெரிிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ள சூழ்நிலையில், நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Cauvery management authoritys first meet Today -LIVE UPDATES

Newest First Oldest First
8:48 PM, 2 Jul

நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி

கேரளம், கர்நாடகாவை சேர்ந்த 4 பக்தர்கள் பலியானதாக தகவல்

கடும் குளிரில் சிக்கி பக்தர்கள் பலியானதாக தகவல்

8:30 PM, 2 Jul

சென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் தற்கொலை

துரைப்பாக்கத்தில் 9வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் பெயர் பிரயங்கா என தகவல்

8:22 PM, 2 Jul

நேபாளத்தில் கனமழை - 1300 பக்தர்கள் சிக்கி தவிப்பு

கைலாஷ் மான சரோவர் யாத்திரை சென்ற 1300 பக்தர்கள் தவிப்பு

சென்னையை சேர்ந்த 19 பக்தர்களும் உதவிக்காக காத்திருப்பு

7:05 PM, 2 Jul

இயக்குநர் பாரதிராஜாவுக்கு சென்னை ஹைகோரா்ட் முன்ஜாமீன்

2 வழக்குகளில் முன்ஜாமீன் கொடுத்தது ஹைகோர்ட்

தினசரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை

6:49 PM, 2 Jul

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது

மிரட்டல் குறித்து போலீஸார் விசாரணை

6:42 PM, 2 Jul

8 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்
6:34 PM, 2 Jul

தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை

திண்டுக்கல், நாமக்கல், விருதுநகர், கடலூர் மாவட்டங்களில் மழை

காஞ்சிபுரம், திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை

ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது

6:33 PM, 2 Jul

ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது

சென்னை குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை

6:04 PM, 2 Jul

திடீர் மழையால் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்

மழை மற்றும் போக்குவரத்து நெரிசலால் அலுவலகம், பள்ளி கல்லூரிக்கு சென்றவர்கள் அவதி

5:59 PM, 2 Jul

சென்னை வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த இடியுடன் மழை
5:54 PM, 2 Jul

சென்னையை மிரட்டும் கருமேகங்கள்

இடி மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி

5:40 PM, 2 Jul

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக ஊழியர்களை காப்பாற்ற துப்பாக்கி சூடு- டிஜிபி

277 ஊழியர்களை மீட்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது: தமிழக டிஜிபி தகவல்

துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் டிஜிபி பதில்

சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது

5:27 PM, 2 Jul

போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை - பஞ்சாப் அரசு அதிரடி

மருந்து இல்லாத பஞ்சாப்பை உருவாக்குவதே இலக்கு - முதல்வர் அமரீந்தர் சிங்

மரண தண்டனை அளிக்கும் பரிந்துரையானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது

4:44 PM, 2 Jul

முதல் தடவை தண்ணீர் வாங்கி கொடுத்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நடப்பதே வேறு - துரைமுருகன்

இதேபோல் ஆணையம் நடந்து தமிழகத்துக்கு நீரை பெற்று தந்தால் மகிழ்ச்சி - துரைமுருகன்

சென்னை தலைமைச்செயலகத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேட்டி

3:53 PM, 2 Jul

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது? தலைமை நீதிபதி அமர்வு

துப்பாக்கிச்சூடு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு

ஹைகோர்ட் கிளையிலுள்ள வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது - ஹைகோர்ட்

3:04 PM, 2 Jul

தமிழகத்திற்கு 30 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்- காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் அதிரடி முடிவு

ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவு

3:03 PM, 2 Jul

காவிரி மேலாண்மை ஆணைய ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது

டெல்லியில் சுமார் 4 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது

2:44 PM, 2 Jul

மும்பையில் ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு

அரசியல், சினிமா, சமூகப்பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை

ராஜ் தாக்ரே மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ஆவார்

1:49 PM, 2 Jul

கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர் போலி சான்றிதழை சமர்ப்பித்ததாக சர்ச்சை

சர்ச்சையில் சிக்கியதால் அவரது டிஎஸ்பி வேலை பறிபோகும் அபாயம்

பஞ்சாபில் டிஎஸ்பியாக இருக்கிறார் கெளர்

அர்ஜூனா விருது பெற்றவர் கெளர்

மகளிர் உலகக் கோப்பைப் போட்டியின்போது பிரபலமானவர் ஹர்மன்பிரீத் கெளர்

1:38 PM, 2 Jul

நெல்லையில் உள்ள கூடங்குளம் அணு ஆலையை மூட உத்தரவிட முடியாது

பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

1:18 PM, 2 Jul

நில அளவை பணியின் போது கழுத்தில் பிளேடு வைத்து பெண் மிரட்டல்

செய்யாறில் எருமவெட்டியில் 8 வழிச்சாலைக்கு நிலம் அளக்க வந்தபோது விபரீதம்

சொல்ல சொல்ல அதிகாரிகள் கேட்காததால் கழுத்தை அறுத்துக் கொண்ட பெண்

1:18 PM, 2 Jul

மெட்ரோ ரயில் ஊழியர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்

கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமை நிர்வாக அலுவலகம் எதிரில் மீண்டும் போராட்டம்

ஊழியர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுத்ததால் மீண்டும் போராட்டம்

12:41 PM, 2 Jul

நீட் தேர்வு கேள்வித்தாள் குழறுபடி வழக்கில் சிபிஎஸ்இக்கு, ஹைகோர்ட் சரமாரி கேள்வி

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளை எந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தீர்கள்

தமிழ் வினாத்தாள் தயாரிக்க எந்த அகராதியை பயன்படுத்தினீர்கள்? ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி

12:35 PM, 2 Jul

ரவுடி பினு தலைமறைவு

ஜூன் 23-ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ரவுடி பினு தலைமறைவு

ஏப்ரல் 12-ஆம் தேதி பூந்தமல்லியில் அரிவாளால் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் பினு

இவர் உள்பட ஏராளமான ரவுடிகளை போலீஸார் சுற்றி வளைத்தனர்

12:23 PM, 2 Jul

சந்தையூர் தீண்டாமை சுவர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

மதுரை கலெக்டர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் ஆணை

சுவர் இருக்கும் பகுதி அரசுக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை வழங்க உத்தரவு

11:22 AM, 2 Jul

15 வருடங்களுக்கு காவிரி தீர்ப்பு செல்லுபடியாகும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கர்நாடகாவால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி எதுவும் செய்ய முடியாது-முதல்வர்

11:08 AM, 2 Jul

காவிரி ஆணைய முதலாவது கூட்டம் தொடங்கியது

பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே டெல்லியில் கூட்டம் தொடங்கியது

தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில உறுப்பினர்கள் பங்கேற்பு

10:51 AM, 2 Jul

நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்

வங்கி மோசடி தொடர்பாக தேடப்படுபவர் நிரவ் மோடி

ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்

10:51 AM, 2 Jul

சேலத்தில் விடிய விடிய கனமழையால் பெண் பலி

சன்னியாசிகுண்டு பகுதியில் விடிய விடிய மழை பெய்தது

மழை நீரில் மூழ்கி புஷ்பா என்பவர் பலி

10:50 AM, 2 Jul

காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது

ஆணைய தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் டெல்லியில் நடக்கிறது

READ MORE

English summary
Cauvery Water Management Authority and Cauvery Water Regulation Committee's first meet will be held in Delhi today. Tamil Nadu has decided to ask Karnataka to release 30 TMC water this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X