கர்நாடகா, தமிழகத்தில் கலவரம்.. தலையிடக் கோரி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: தமிழகம்-கர்நாடகாவில் அமைதியை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிலும், தமிழகத்திலும், வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இந்த மனு, நாளை கர்நாடகாவில் நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்தையும் குறிப்பிட்டுள்ளது.
நிலைமை ஏற்கனவே மோசமாகிவிட்டதாகவும், எனவே இதில் கோர்ட் தலையிட வேண்டியது கட்டாயம் என்று மனுதாரர் கோரிக்கைவிடுத்துள்ளார். இம்மனுவை சுப்ரீம்கோர்ட் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

வன்முறைகள்
நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில் நாளை இம்மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. பெங்களூரில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்டதையடுத்து ராமேஸ்வரத்தில் கன்னடர் தாக்கப்பட்டார். சென்னையில் கன்னடர் ஹோட்டல்கள் மீது கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது. இதையடுத்து திங்கள்கிழமை பெங்களூரில் மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

பெரும் இழப்பு
பெங்களூரில் இன்றும் ஊரடங்கு உத்தரவு தொடருகிறது. மாநில அரசுக்கு இந்த வன்முறை சுமார் ரூ.25 ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுநல மனு
இந்நிலையி்ல் கன்னியாகுமரியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மீண்டும் சிக்கிய கர்நாடகா
கர்நாடகாவில் நடைபெற்ற பந்த்தை ஏற்கனவே சுப்ரீம்கோர்ட் கடுமையாக கண்டித்திருந்த நிலையில், அதே நீதிபதி பெஞ்சில் நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications