கர்நாடகாவில் இன்று ரயில் மறியல்- ரயில் சேவை தகவல் அறிய 📞9480802140ஐ அழைக்கலாம்
பெங்களூரு: கர்நாடகாவில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 9480802140 என்ற எண்ணில் ரயில் சேவை குறித்து அறியலாம் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பெங்களூரில் பெரும் கலவரம் நடந்தது. அப்போது வாட்டாள் நாகராஜ் செப்டம்பர் 15ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், திடீரென பந்த் இல்லை என்றும் ரயில் மறியல்தான் நடத்த உள்ளோம் என்றும் கூறியிருந்தார். அதன் அடிப்படையில், இன்று திட்டமிட்டபடி ரயில் மறியல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இந்த ரயில் மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், இன்று யாரும் ரயிலில் பயணம் செய்ய முடியாது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற எழுந்தது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
பெரும் கலவரத்திற்கு பின்னர், நேற்று முதல் பெங்ளூருவில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் உள்ள அனைத்து பேருந்துகளும் நேற்று வழக்கம் போல் ஓடின. எனினும் தமிழகத்திற்கு செல்லும் பேருந்துகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன. என்றாலும் தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய ரயில் மறியல் போராட்டம் மீண்டும் கர்நாடகா மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் அபாயம் எழுந்துள்ளது. எனினும் ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்றும் , 9480802140 என்ற எண்ணில் ரயில் சேவை குறித்து அறியலாம் என்றும் ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications