காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. தமிழக கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
Recommended Video

டெல்லி: காவிரியில் இருந்து 63 டிஎம்சி நீர் திறக்க உத்தரவிடக்கோரும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதுதொடர்பான விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. காவிரி வழக்கில் மாநில அரசுகள் சார்பில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தை தெரிவிக்க பெறுவதற்காக உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
தமிழகத்துக்கு காவிரியிலிருந்து 63 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கோரி புதிய மனுவை தாக்கல் செய்வதற்காக தமிழக அரசைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் டெல்லியில் கடந்த சில தினங்களாக முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் அதுகுறித்து மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.
மனுதாக்கல் செய்ய அனுமதிக்கக் வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க கடந்த மாதம் 21ம் தேதி, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தீர்ப்பு நிலுவையில் உள்ளதால் புதிதாக எந்த மனுவும் தாக்கல் செய்ய வேண்டாம் என சம்மந்தப்பட்ட மாநிலங்களை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்த நிலையிலும், காவிரியில் இருந்து 63 டிஎம்சி நீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்தது. அதை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தொடர்ந்து வலியுறுத்தினால் ஏதாவது பலன் கிடைக்குமா என்று தமிழக சட்டக்குழு முயன்று வருவதாக கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications