காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் அறிவிப்பு- மத்திய அரசு அதிரடி!
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் பிரதிநிதியையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினரை கர்நாடகா அரசு அறிவிக்காமல் இழுத்தடித்தது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்களை மத்திய அரசு இன்று அறிவித்தது. தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கர்நாடகா உறுப்பினரை அறிவிக்காததால் அம்மாநில நீர்வளத்துறை நிர்வாக செயலாளர் பகுதி நேர உறுப்பினராக இருப்பார் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா பிரதிநிதிகள் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பர்.
காவிரி ஒழுங்காற்று குழு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்படும். இதேபோல் மத்திய நீர்வள ஆணைய பொறியாளர் நவீன் தலைமையில் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்காற்று குழுவில் தமிழக அதிகாரிகள் செந்தில், கிருஷ்ண உன்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளார். கேரளாவின் ஜோஷி, புதுச்சேரியின் சண்முகசுந்தரம் ஆகியோரும் உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆனால் கர்நாடகா உறுப்பினர் இடம்பெறவில்லை.
காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமையும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications