For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாலு பிரசாத் குற்றவாளி.. மாட்டு தீவன ஊழல் வழக்கில் அதிரடி தீர்ப்பு- Live

By Veera Kumar
Google Oneindia Tamil News

ராஞ்சி: முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகாரில் கடந்த 1991 முதல் 1995 வரையில் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது கால்நடை தீவனம் வாங்குவதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. தியோஹர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் உள்ளிட்ட 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, 38 பேருக்கு எதிராக கடந்த 1997ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில், 11 பேர் இறந்துவிட்டனர். 3 பேர் அரசு தரப்பு சாட்சியாக மாறிய நிலையில், 2 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டனர்.

CBI court to decide fate of Lalu Prasad Yadav in fodder scam case- Live

-லாலு பிரசாத்திற்கு கூட்டணி கட்சி காங்கிரஸ் ஆதரவு

-மத்திய அரசால் சிபிஐ தப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

-செய்தியாளர் சந்திப்பில் காங்கிரசின் மனிஷ் திவாரி பாஜக மீது குற்றச்சாட்டு

-இப்போது உண்மைகள் மறைக்கப்படலாம், ஒருநாள் உண்மை வெல்லும்- லாலு பிரசாத் டிவிட்

- மாட்டு தீவன வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி- சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

- 16 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு, 6 பேர் விடுதலை-சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

- தண்டனை விவரம் ஜன. 3ம் தேதி அறிவிப்பு

-ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு

-கால்நடை தீவன ஊழல் வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு வெளியாக உள்ளது

-ஊழல் வழக்கில் தனக்கே தீர்ப்பு சாதகமாக வரும் என லாலு நம்பிக்கை

-எந்த மாதிரி தீர்ப்பு வெளியானாலும் அமைதி காக்க வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு லாலு கோரிக்கை

English summary
Lalu, accompanied by younger son Tejaswi Yadav, arrived in the capital of Jharkhand to present himself before special CBI judge Shivpal Singh as a special CBI court going to give verdict in a fodder scam case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X