4-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுபிரசாத் யாவுக்கு நாளை தண்டனை அறிவிப்பு
4-வதுகால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுபிரசாத் யாதவிற்கு நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
ராஞ்சி : 4-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலுபிரசாத் யாதவுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படுகிறது.
பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் 1990களில் முதல்வராக லாலுபிரசாத் யாதவ் இருந்தபோது, கால்நடைகளுக்குத் தீவனம் வாங்கிய வழக்கில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இத்திட்டத்தின் கீழ் மாநில கருவூலங்களில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் லாலுபிரசாத் யாதவ், முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
900 கோடி ரூபாய் அளவில் நடந்த ஊழல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதில் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட முதல் வழக்கின் தீர்ப்பில் லாலுவிற்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சிறை சென்ற லாலு, ஜாமீனில் விடுதலையாகி அந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்துள்ளார்.
தேவ்கர் மாவட்ட கருவூலத்தில் கையாடல் செய்யப்பட்ட பணம் தொடர்பான இரண்டாவது வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங், கடந்த டிசம்பர் மாதம் லாலுவிற்கு மூன்றரை ஆண்டுகள் சிறைதண்டனையும், பத்து லட்சம் அபராதமும் விதித்தார்.
மூன்றாவதாக சைபாஸா மாவட்ட கருவூலத்தில் முறைகேடாக ரூ.37.62 கோடி ரூபாய் எடுத்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம், லாலுவிற்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில்,இரு தினங்களுக்கு முன்பு தும்கா மாவட்ட கருவூலத்தில் கையாடல் செய்யப்பட்ட ரூபாய் 3.13 கோடி ரூபாய்க்கான நான்காவது வழக்கில் லாலுபிரசாத் யாதவை குற்றவாளியாக அறிவித்தது சிபிஐ நீதிமன்றம். இந்நிலையில், இந்த வழக்கிற்கான தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளதால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications