For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.. சிபிஐ நிரூபிக்க தவறிவிட்டது.. நீதிபதி சைனி சொன்னது இதுதான்!

குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    2 ஜி வழக்கு- ஆ ராசா, கனிமொழி விடுவிப்பு- வீடியோ

    டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு நீதிமன்றம் அருகே திமுக தொண்டர்கள் வெடி வெடித்துக்கும் கனிமொழி கனிமொழி என கோஷமிட்டும் கொண்டாடி வருகின்றனர்.குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

    6 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான திமுகவினர் குவிந்திருந்தனர்.

    நீதிமன்ற வளாகத்திலும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திமுக தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அனைவரும் விடுதலை

    அனைவரும் விடுதலை

    இதனால் திமுகவுக்கு எதிராக தீர்ப்பு வருமோ என்ற அச்சம் திமுகவினர் இடையே வந்தது. ஆனால் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி சைனி கனிமொழி, ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

    சிபிஐ தவறிவிட்டது

    சிபிஐ தவறிவிட்டது

    குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று ஓபி சைனி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

    அனைவரும் விடுதலை

    அனைவரும் விடுதலை

    சந்தேகத்தை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி. இதன்மூலம் கனிமொழி எம்பி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா ராஜாத்தியம்மள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    சர்வதேசளவில் தலைப்பு செய்தி

    சர்வதேசளவில் தலைப்பு செய்தி

    1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக பாஜக மூத்தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார். ஆட்சி மாற்றத்துக்கு காரணமான இந்த ஊழல் வழக்கு சர்வதேச அளவில் தலைப்பு செய்தியானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    CBI failed to prove the accusation on the 2G sacam said Delhi CBI court judge OP Shini. A Rasa and Kanimozhi has been released from the 2G case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X