பேசிப் பொழுதைக் கழிக்க 4 "பிசி".. பசிச்சா சாப்பிட பர்கர்... நல்லா வாழ்றாருப்பா சோட்டா ராஜன்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சாதா கிரிமினலுக்கும் விஐபி கிரிமினலுக்கும் இடையே 6 அல்ல 60 வித்தியாசங்களை இந்தியாவில் மட்டுமே பார்க்க முடியும். சோட்டா ராஜன் அதற்கு சரியான உதாரணம்.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு சிபிஐயின் தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ள சோட்டா ராஜனுக்கு சிறப்பு கவனிப்பு கொடுக்கப்படுகிறதாம். விசாரணையில் அல்ல.. சாப்பாடு உள்ளிட்டவற்றில்.

அவருக்கு தரப்பட்டுள்ள வசதிகளைக் கேட்டால் நாமும் சோட்டா ராஜன் போல மாறி விடலாம் போலிருக்கே என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். அப்படி ஒரு கவனிப்பில் இருக்கிறார் சோட்டா ராஜன்.
- சோட்டா ராஜன் தங்க வைக்கப்பட்டுள்ளது ஏசி அறையில்.
- 20 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட இந்த அறையில் புளோர்மேட் விரிக்கப்பட்டு விஐபி ரேஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
- அறையை சுற்றி, ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களும் உள்ளன.
- வெடிகுண்டு நிபுணர்களும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- சோட்டா ராஜன் சாப்பிடுவது எல்லாமே வெளிநாட்டு உணவுகள்தானாம். நம்ம ஊர் சாப்பாடு வாயில் இறங்குவதில்லையாம்.
- பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாட்டுக்கு ஓடி விட்ட சோட்டா ராஜன், இந்திய உணவு வகைகளை மறந்து விட்டாராம்.
- சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் சோட்டாராஜன் வாழ்ந்ததால், அந்த நாடுகளின் உணவுதான் பிடிக்கிறதாம்.
- பச்சை கீரை வகைகள், பர்கர், சீஸ் சாண்ட்விச், கார்ன்பிளேக் இவற்றுடன் வேக வைத்த முட்டைகள் அவருக்கு உணவாக வழங்கப்படுகிறது.
- வழக்கமாக விசாரணைக் கைதிகளுக்கு ரொட்டி, பருப்பு வகை மற்றும் ஒரு காய்கறி கூட்டு மட்டுமே அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சோட்டா ராஜனுடன் பேசிக் கொண்டிருப்பதற்காகவே நான்கு போலீஸாரையும் போட்டு வைத்துள்ளனராம்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications