தபோல்கர் படுகொலையில் இந்துத்துவா தீவிரவாதிதான் முக்கிய குற்றவாளி... குற்றப்பத்திரிகையில் சிபிஐ
மும்பை: புனேவைச் சேர்ந்த சமூக சேவகரும் பகுத்தறிவாளருமான நரேந்திர தபோல்கர் கொலையில், சனாதன் சான்ஸ்தான் என்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் உறுப்பினரான விரேந்திர தாவ்டே முக்கிய குற்றவாளி என சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் குற்றப்பத்திரிகையில் குற்ற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சமூக சேவகரும், பகுத்தறிவு சிந்தனையாளருமான நரேந்திர தபோல்கர் 2013ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி புனேயில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க தாமதமானது. இதனையடுத்து, மும்பை உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்னர் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சனாதன் சான்ஸ்தான் என்ற இந்து அமைப்பின் உறுப்பினர் விரேந்திர தாவ்டே முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தபோல்கர் கொலையாளியாக சிபிஐ வினய் பவார், சாரங் அகோல்கர் ஆகிய இருவரும் சனாதன் சான்ஸ்தானின் உறுப்பினர்கள் என்பதை சிபிஐ உறுதி செய்துள்ளது.
அகோல்கர் மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. பவார் மீது இது போன்ற குற்றப் பின்னணிகள் எதுவும் இல்லை என்றாலும் 2009ம் ஆண்டில் இருந்து இவர் எஸ்கேப் ஆகி எங்கேயோ மறைந்திருக்கிறார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடநம்பிக்கைகளை விரட்ட கடுமையான ஒரு சட்டம் தேவை என்று தீவிரமாக போராடி வந்த தபோல்கரை கொலை செய்வதற்கான வேலை தாவ்டேவிடம் ஒப்படைக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications