கொலை மிரட்டல்கள் எதிரொலி.. ராம் ரஹீம் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு இசெட் பிளஸ் பாதுகாப்பு!
டெல்லி: போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் மீதான பாலியல் வழக்கில் தீர்ப்பளித்த சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங்கிற்கு இசெட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் மீதான 15 வருட கால பாலியல் வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ராம் ரஹீம் குற்றவாளிதான் என சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங் தீர்ப்பு வழங்கினார். தண்டனை விவரத்தை திங்கள்கிழமை அறிவிப்பதாக அவர் கூறினார்.

ஆனால், அதற்குள்ளாக தேரா சச்சா ஆதரவாளர்கள் பெரும் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். இதில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன. 31 பேர் கொல்லப்பட்டனர்.
கலவரத்தை கட்டுப்படுத்துவதில் ஹரியானா அரசு தவறிவிட்டதாக ஹைகோர்ட் சீறியது. இந்த நிலையில், நீதிபதி ஜக்தீப் சிங், திங்கள்கிழமை ராம் ரஹீம் அடைக்கப்பட்ட சிறையில் தற்காலிக நீதிமன்றத்தை அமைத்து தீர்ப்பு வழங்கினார். சாலை மார்க்கமாக செல்லாமல் ஹெலிிகாப்டரில் நீதிபதி பயணித்தார். ராம் ரஹீம் காட்டுமிராண்டி போல பாலியல் கொடுமைகள் செய்ததாக தீர்ப்பில் குறிப்பிட்டதோடு, 20 வருடம் சிறை தண்டனை விதித்தார்.
நீதிபதிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலைமிரட்டல்கள் வந்தபடியுள்ளதாம். ராம் ரஹீம் ஆதரவாளர்கள்தான் இவ்வாறு மிரட்டல்கள் விடுப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிபதிக்கு இசெட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு வளையத்தில், 55 போலீசார், 10 தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் இருப்பார்கள். நீதிபதியோடு அவரது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்குவார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications