5 மாநில தேர்தல்.. 10, 12 - ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு தேதியில் மாற்றம்

சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12ஆ-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி 4-ந் தேதி முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், சில பாடங்களின் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.

CBSE Class 10, 12 exams Dates changed

அதன்படி மார்ச் 10-ல் நடைபெறவிருந்த 10-ம் வகுப்பு தமிழ் தேர்வு 18-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 23-ல் நடைபெறவிருந்த 10-ம் குருங் படத்தேர்வு மார்ச் 10-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 -ல் நடைபெறவிருந்த 10-ம் என்சிசி தேர்வு மார்ச் 23-க்கு மாற்றப்பட்டுள்ளது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்புக்கான தேர்வில் உடற்கல்விக்கான தேர்வு ஏப்ரல் 10-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிக்கும், சமூகவியல் தேர்வு ஏப்ரல் 12-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 20-ந்தேதிக்கும், திரையரங்கு ஆய்வு தேர்வு (Theatre Studies paper) ஏப்ரல் 20-ந்தேதிக்குப் பதில் ஏப்ரல் 10-ந்தேதியும், தங்குல் மொழிப்பாட தேர்வு மற்றும் உணவு சேவை தாள் தேர்வு (Food Service paper) ஏப்ரல் 29-ந்தேதிக்குப்பதில் ஏப்ரல் 26-ந்தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+