சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும்.. கல்வி வாரியம் அறிவிப்பு
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை www. cbse.nic.in, www. cbseresults.nic.in. ஆகிய இணையதளங்களில் அறியலாம்.
டெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற்றன. இத்தேர்வை 11 லட்சம் பேர் எழுதினர். சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் சுமார் 61 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்வதாக சிபிஎஸ்இ அறிவித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அதை ரத்து செய்வது நியாயமற்ற செயல் எனத் தெரிவித்தது.
இந்த ஆண்டில் புதிய ரத்து முடிவுகள் எதையும் அமல்படுத்த வேண்டாம் எனவும் சிபிஎஸ்இ இயக்குநரகத்துக்கு அறிவுறுத்தியது. நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து 24ம் தேதி வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இந்நிலையில் நாளை சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www. cbse.nic.in, www. cbseresults.nic.in. ஆகிய இணையதளங்களில் அறியலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications