For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான முடிவுகளை www.cbseresults.nic.in, www.results.digilocker.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக பொது நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

 CBSE declares NEET 2016 results for both phases.

அதன்படி, மே 1-இல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்திய முதல்கட்டத் தேர்வை நாடு முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்த நிலையில், தேர்வுக்கு தாற்காலிக தடை விதித்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்ததால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தையும் "நீட்' தேர்வின் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், 2-ஆம் கட்ட "நீட்' தேர்வை நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.

இத்தேர்வுக்கான முடிவுகளை www.cbseresults.nic.in, www.results.digilocker.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

English summary
The Central Board of Secondary Education (CBSE) has on Tuesday announced the results of both the phases of the National Eligibility-cum-Entrance Test for medical colleges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X