பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமரா: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!
டெல்லி: பெண்களின் நலன் கருதி பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள முக்கியமான 32 நகரங்களில் உள்ள பேருந்துகளில் பெண்கள் நலன் கருதி, சி.சி.டி.வி. பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் கூறினார்.

இதனால் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் செல்ல முடியும் என்றும், குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் பேருந்துகள் செல்லும் இடத்தை கண்டறிய ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும், பேருந்துகள் செல்லும் இடத்தை கண்டறிய ஜி.பி.எஸ். கருவியும் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட செலவு நிதி ஒதுக்கப்பட்டதும் இந்த திட்டம் அமலுக்கு வரும்" என்று கூறினார்.
இதற்கான திட்ட செலவு 1,405 கோடி ரூபாய் என்றும், நிதி ஒதுக்கப்பட்டதும் இரண்டு வருடங்களில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும் ப. சிதம்பரம் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பத்துநாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பிற்காக தலைநகர் டெல்லி மட்டுமல்லாது நாடுமுழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
ஒரு ஆண்டுகள் கழித்து பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications