வெங்காயம் திருட்டு: சிசிடிவி வைத்து கண்காணிக்கும் குஜராத் வியாபாரிகள்
அகமதாபாத்: தங்கம் போல உயர்ந்து வரும் வெங்காயத்தை சிசிடிவி கேமரா வைத்து பாதுகாக்கின்றனர் வியாபாரிகள்.
வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லி, காஷ்மீரில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. வெங்காயத்துக்கு நாடெங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்பனையாகிறது. இதனால் காய்கறி கடைகளில் வெங்காயம் திருடப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
குஜராத் மாநிலத்தில் மதுவா நகரில் உள்ள மார்க்கெட்தான் வெங்காயம் விற்பனைக்கான பெரிய மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் மட்டும் தினமும் சுமார் 25 கிலோ வெங்காயம் திருட்டு போய் விடுவதாக தெரிய வந்துள்ளது.
நேற்று முன்தினம் மதுவா மார்க்கெட்டில் புகுந்த மர்ம மனிதர்கள் 2 மூட்டை வெங்காயத்தை எடுத்து சென்று விட்டனர். இதையடுத்து அந்த மார்க்கெட் முழுவதும் ரகசிய காமிராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இரவு-பகலாக கண்காணிக்கும் இந்த காமிராக்கள் மூலம் வெங்காயம் திருட்டை தடுக்க முடியும் என்று காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர வெங்காயம் இருப்பு வைக்கப்படும் குடோன்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications