பீகார் சட்டசபை தேர்தல்: அவசரப்பட்டு பட்டாசு வெடித்து "சங்கு ஊதிய" பா.ஜ.க.!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னணிலை வகித்ததால் அக்கட்சி தொண்டர்கள் சங்கு ஊதியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். ஆனால் சிறிது நேரத்துக்கு பின்னர் பா.ஜ.க. பின் தங்கியிருப்பதாக தேர்தல் முடிவுகள் வெளியானதால் அக்கட்சி தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பீகாரின் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
Celebrations outside BJP Office in Patna after early trends show NDA leading #BiharResults pic.twitter.com/vgvGafenAS
— ANI (@ANI_news) November 8, 2015 இன்றைய வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
இதனைத் தொடர்ந்து பாட்னாவில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் சங்கு ஊதியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Celebration outside BJP Office in Patna after early trends show NDA leading #BiharResults pic.twitter.com/ELytB6C3zI
— ANI (@ANI_news) November 8, 2015 ஆனால் சிறிது நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது.... ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது.
இதனால் அவசரப்பட்டு சங்கு ஊதி கொண்டாடிய பா.ஜ.க. தொண்டர்கள் பெரும் ஏமாற்றமடைந்து சோகத்தில் மூழ்கினர்.












Click it and Unblock the Notifications