உலக புற்றுநோய் தினம்: புற்றுநோயை வென்ற யுவராஜ், மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ்
சென்னை: இன்று உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் புற்றுநோயை வென்ற பிரபலங்களை பார்ப்போம்.
உலக புற்றுநோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புற்றுநோயை வென்ற சில பிரபலங்களை பார்ப்போம்.

யுவராஜ் சிங்
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து நாடு திரும்பினார்.

மனிஷா கொய்ராலா
பிரபல நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து குணமடைந்தார். யுவராஜ் சிங்கும், மனிஷாவும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தா மோகன்தாஸ்
நடிகை மம்தா மோகன்தாஸுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்து சிகிச்சை பெற்றார். குணமடைந்த அவருக்கு மீண்டும் நோய் தாக்கம் ஏற்படவே மறுபடியும் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் பூரண குணமடைந்துவிட்டார்.

லான்ஸ் ஆம்ஸ்டிராங்
டூர் டி பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் தொடர்ந்து பல முறை பட்டம் வென்ற லான்ஸ் ஆம்ஸ்டிராங் புற்றுநோயுடன் போராடி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கயலி மினோக்
பாடல் ஆசிரியர், நடிகை, பாடகி என்று பல முகங்கள் கொண்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கயலி மினோகிற்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. அவர் புற்றுநோயை வென்று சாதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

ராபர்ட் டி நீரோ
பிரபல ஹாலிவுட் நடிகரான ராபர்ட் டி நீரோவுக்கு கணைய புற்றுநோய் ஏற்பட்டது. வயாதன காலத்திலும் அவர் புற்றுநோயை எதிர்த்து போராடி வென்றார்.

மார்டினா
40களிலும் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கனையான மார்டினா நவரத்திலோவாவுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டது. அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு பூரண குணமடைந்தார்.

லிசா ரே
மாடலும், நடிகையுமான லிசா ரே புற்றுநோயுடன் போராடி வென்றவர். அண்மையில் தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது. புற்றுநோயில் இருந்து மீண்ட பிறகு அவர் துவங்கிய பிளாக் பல புற்றுநோய் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications