காவிரி மேலாண்மை வாரியம்: பிடிவாத கர்நாடகா மீது சுப்ரீம் கோர்ட்டில் புகார்… மத்திய அரசு முடிவு!
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உறுப்பினர் பெயரை அளிக்காத கர்நாடக மாநில அரசின் மீது மத்திய அரசு இன்று புகார் செய்ய உள்ளது.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அக். 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட வேண்டும் என்றும் 1ம் தேதிக்குள் உறுப்பினர் பெயர்களை அனுப்பி விட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதுதவிர 1ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை தினமும் 6000 கன அடி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடவில்லை. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அதற்கான உறுப்பினர் பெயரையும் இன்னும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. ஆக, சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதுவும் கர்நாடகத்திற்கு அவசியமில்லை என்றாகிவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களும் மேலாண்மை வாரியத்திற்கான உறுப்பினர் பெயர்களை தெரிவித்துவிட்ட நிலையில், கர்நாடக அரசு மட்டும் இன்னும் பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனால் நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இன்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு இன்னும் உறுப்பினர் பெயரை தெரிவிக்க வில்லை என்ற புகாரை அளிக்க உள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications