மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படும் - மத்திய அரசு
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட சம்பளத்துடன் நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
7-வது ஊதியக் குழு பரிந்துரையைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இதன்மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது.
இதன்படி மத்தி அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச சம்பளம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு சம்பள உயர்வு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும். இதர படிகள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தற்போதைய விகிதாச்சாரப்படியே இதர படிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும். ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை ஒரே தவணையாக தரப்படும். ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications