மத்திய அரசின் 'ஆலோசனை' இல்லாமல் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது: உள்துறை அமைச்சகம் கடிதம்
டெல்லி: மத்திய அரசின் ஆலோசனை இல்லாமல் ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை புதன்கிழமை கூடி முடிவு செய்தது.

இது தொடர்பாக மத்திய அரசு 3 நாள்களில் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கெடு விதித்து கடிதம் அனுப்பியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், ராஜிவ் கொலை வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி, குற்றவாளிகள் 7 பேருக்கும் தடா சட்டம், ஆயுதச் தடைச் சட்டம் ஆகிய மத்திய அரசின் சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்ற விசாரணை முறைச் சட்டம் 435- பிரிவின் படி, மத்திய அரசின் ஆலோசனை இல்லாமல் மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகையால், ஏழு பேரை விடுவிப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு சட்ட விரோதமானது; சட்டப்படி செல்லுபடியாகாது என்பதால் அவர்களை விடுவிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications