ஒரு மாநில தேர்தலுக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தை நசுக்கும் மத்திய அரசு!
ஒரு மாநில தேர்தலுக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயல் ஏற்கத்தக்கதல்ல.
Recommended Video

டெல்லி: தமிழக, புதுவை மக்களை துச்சமாக எண்ணி ஒரு மாநிலத்தின் தேர்தல் பிரசாரத்துக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தையே நசுக்குவது மாற்றான்தாய் மனப்பான்மை அல்லாமல் வேறு என்ன?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் எத்தனை கால அவகாசம் அளித்தாலும் மீண்டும் மீண்டும் அவகாசம் கேட்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது மத்திய அரசு. இன்றும் காவிரி வரைவு அறிக்கைக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் ஒப்புதல் அளிக்கவில்லை என்று காலஅவகாசம் கோரியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் 8 வார கால அவகாசம் அளித்த நிலையில் மீண்டும் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தையே அவமதித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் இல்லாவிட்டால் அவர் வரும் வரை உச்சநீதிமன்றமாகவே இருந்தாலும் காத்திருக்கத்தான் வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டதாகவே கருதப்படுகிறது.
காவிரி வாரியம் என்பது தமிழக, புதுவை மக்களுக்கு வாழ்வாதார பிரச்சினையாகும். இதை கூட புரிந்து கொள்ளாமல் காவிரியை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக கர்நாடக தேர்தலில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதை போல் தமிழக, புதுவை மக்களை துச்சமாக கருதி ஒரு மாநில பிரசாரத்துக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தை தூக்கிப் போட்டு மிதிப்போம் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது மத்திய அரசு.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications