உலகை மிரட்டும் ஜிக்கா... இந்தியாவில் நுழையாமல் தடுக்க மத்திய அரசு தீவிரம்
டெல்லி: ஜிக்கா வைரஸ் இதுவரை இந்தியாவில் பரவவில்லை. எனவே மக்கள் பீதி அடையத் தேவையில்லை. அதேசமயம், ஜிக்கா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்குச் செல்லும்போது கவனமுடன் இருக்குமாறு மத்திய அரசு இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கொசு மூலம் பரவும் ஜிக்கா வைரஸ் மிகப் பெரிய அளவில் உலக நாடுகளில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து உலக நாடுகள் தற்காப்பு நடவடிக்கைகளில் குதித்துள்ளன.
மத்திய அரசும் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்ககைள் தேவை என்பது குறித்த ஆலோசனைகளில் இறங்கியுள்ளது. மக்களுக்கும் அது பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அறிவுறுத்தல்களையும் அது பட்டியலிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பட்டியல்...

விளம்பர போர்டு...
அனைத்து சர்வதேச, உள்ளூர் விமான நிலையங்களிலும் ஜிக்கா வைரஸ் பாதிப்பு குறித்த சைன் விளம்பர போர்டு வைக்கப்படும்.

சிகிச்சை...
வெளிநாடு சென்று திரும்பும் பயணிகள், இந்த பாதிப்பு தங்களுக்கு பரவியிலிருந்தால் விமான நிலையத்திலேயே அதுகுறித்து உள்ள மையத்தில் சொல்லி நிவாரணம் பெற வேண்டும்.

கருவில் உள்ள சிசுக்கள்...
அமெரிக்க நாடுகளில்தான் ஜிக்கா வைரஸ் தற்போது அதி வேகமாகப் பரவி வருகிறது. இதனால் கருவில் உள்ள சிசுக்கள் கடும் பாதிப்பைச் சந்திக்கின்றன.

ஏடிஎஸ் கொசு...
இந்தியாவில் இதுவரை பரவவில்லை. ஏடிஸ் எகிப்தி என்ற கொசு மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. இதுவே டெங்கு நோய் பரவலுக்கும் காரணமான கொசு ஆகும்.

கண்காணிப்புக் குழு...
சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் ஜெனரல் தலைமையிலும், இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலின் கூட்டில் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம்...
மேலும் டெல்லியில் உள்ள தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையமானது, நாடு முழுவதுக்குமான ஒருங்கிணைந்த இணைப்பு மையமாக செயல்படும்.

பாதுகாப்பு தேவை...
பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்வதை முடிந்தவரை மக்கள் தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்று திரும்பவேண்டும்.

எச்சரிக்கை தேவை...
கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்பமாக முயற்சித்து வரும் பெண்கள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்லாமல் தவிர்ப்பதே நல்லது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications