டெல்லியில் முதல்வரைவிட துணைநிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம்: மத்திய அரசு தடாலடி
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நடந்து வரும் நிலையில், யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேவைப்பட்டால்தான் அவர் முதல்வரின் கருத்தை கேட்டறியலாம் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் முதலமைச்சர்-துணை நிலை ஆளுநர் இடையே யார் அதிக அதிகாரம்படைத்தவர்கள் என்று மோதல் நிலவிவருகிறது.

டெல்லியில் சட்டதிட்டங்கள் முற்றிலும் மாறுபட்டவை. மேலும் அது யூனியன் பிரதேசமும் கூட. ஆனால், கெஜ்ரிவால், முதல்வருக்குதான் அதிகாரம் உள்ளது என்று புது குண்டை தூக்கி போட்டார். ஆனால், இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிக்கையில், முதல்வரைவிட, யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர்களே அதிக அதிகாரம்படைத்தவர்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. தேவைப்பட்டால் துணை நிலை ஆளுநர் முதல்வரோடு கலந்தாலோசிக்கலாம் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு, ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிகாரிகளை நியமிப்பதில் பெரியளவில் பண பரிமாற்றம் உள்ளதாக அந்த கட்சியின் தலைவர்களின் ஒருவரும் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் உயர் அதிகாரிகளை நியமிப்பது மற்றும் பணி மாறுதல் செய்வதில் பெரிய அளவில் பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே தான் உயர் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு தன்வசம் வைத்துக்கொண்டுள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இதனிடையே முதன்மை செயலர் உட்பட அனைத்து துறை செயலர்களின் கூட்டத்தையும் இன்று அவர் கூட்டியுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications