நேதாஜி பற்றிய மேலும் 25 ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு
டெல்லி: இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான இறுதி ஆவணங்களை மத்திய அரசு நேற்று இணையதளத்தில் வெளியிட்டது.
சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜியின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நிலவுகிறது. அவர் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்றும் இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்து 1964-ம் ஆண்டு இறந்து விட்டார் என்றும் பல தகவல்கள் கூறுகின்றன.

எனினும் அவருடைய கடைசி கால வாழ்க்கை பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருவதால், அவரை பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் அதை ஏற்று, நேதாஜி பிறந்தநாளான கடந்த ஜனவரி 23-ந்தேதியன்று, நேதாஜி பற்றிய 100 கோப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பின்னர், உள்துறை அமைச்சகத்திடம் இருந்த 50 கோப்புகள் மார்ச் 29-ம் தேதி வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29-ம் தேதி 25 கோப்புகளும் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், நேதாஜி தொடர்பான மேலும் 25 ஆவணங்களை மத்திய கலாசாரத்துறை நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நான்காவது தொகுப்பாக வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகம், உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களிடம் இருந்தவை ஆகும்.
இதில், நேதாஜி காணாமல் போனது தொடர்பான முகர்ஜி கமிஷன் விசாரணை, நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பான விவரம், பாராளுமன்றத்தில் நடந்த விவாதம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உள்ளன.
மேலும் நேதாஜியை போர் குற்றவாளி என ஒருபோதும் சித்தரிக்கவில்லை என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது. இவை, 1968-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டுவரையிலான கோப்புகளும் ஆகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications