காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சொல்லவில்லை... மத்திய அரசு வீசும் குண்டு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிடவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 4 மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கூறியதாவது : காவிரி நீர் பங்கிட்டு கொள்வதற்காக அமைக்கப்பட உள்ள அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதன் செயல்பாடுகள் என்ன, என்னென்ன விஷயங்களை இந்த அமைப்பு கையாளும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

4 மாநில அரசுகளின் அதிகாரிகளிடம் இது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. மாநில அரசுகள் இன்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன, அவர்கள் எழுத்து மூலமாக பரிந்துரைகள் அளித்தால் அவையும் கருத்தில் கொள்ளப்படும்.
காவிரி நடுவர் மன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை அளித்தது. உச்சநீதிமன்றம் தங்களின் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை, ஒரு திட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியமா அல்லது வேறு குழுவா என்பதை மத்திய அரசு முடிவு செய்யவில்லை. உச்சநீதிமன்றம் காவிரி நீரை பங்கிட்டு கொள்வது குறித்து 6 வாரத்துக்குள் குழு அமைத்து செயல் திட்டம் வகுக்க உத்தரவிட்டது, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக
அடுத்த கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் உபேந்திரா பிரசாத் சிங் கூறியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications